Home இலங்கை அரசியல் இலங்கை சமூக ஊடகவியலாளரின் அரசியல் பிரவேசம்

இலங்கை சமூக ஊடகவியலாளரின் அரசியல் பிரவேசம்

0

Courtesy: Sivaa Mayuri

சமூக ஊடகவியலாளரான அசேன் சேனாரத்ன ( Ashen Senarathna), எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தாம் கொழும்பில் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூகப் பிரச்சினைகள் மற்றும் தொண்டு முயற்சிகளில் கவனம் செலுத்தும் அவரது காணொளிகள் அவருக்குப் பெரும் பின்தொடர்வாளர்களை பெற்றுத்தந்துள்ளன.

இந்த பின்தொடர்வாளர்களை மையப்படுத்தி அவர், இலங்கையின் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பது சமூக ஊடகப்பரப்பில் கேள்வியாக முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் 

ஏற்கனவே, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சுயேச்சை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக ஊடகவியலாளர் ஃபிடியாஸ் பனாயோடோவை பின்பற்றியே அசேன் இலங்கையின் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார். 

அதேவேளை, முன் அரசியல் அனுபவம் இல்லாத போதிலும், ஃபிடியாஸ், ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் 19.4வீத மூன்றாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்றார்.

அவர், தமது காணொளிகளுக்காக 2.6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்வாளர்களை கொண்டுள்ள நிலையில் அவரது காணொளிகள் அதிகமாக பகிரப்பட்டுள்ளன.  

NO COMMENTS

Exit mobile version