யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தந்துள்ள பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் சரிகமப லிட்டில் சாம்ப்ஸின் சீசன் 4 இன்
ரைட்டில் வின்னரான திவினேஷ் உட்பட பாடகர்கள் இன்று நல்லூர்
கோயிலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
யாழில் நேற்று (22) நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப பாடகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்
குறித்த குழுவினர் பலாலி விமான நிலையம் (Jaffna International Airport) ஊடாக நேற்று முன்தினம் (21.06.2025) யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர்.
சரிகமப குழுவினர்
ஜீ தமிழ் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா உடன் “சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்” பாடகர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார அரங்கில் நடைபெறவிருந்தது.
யாழ்ப்பாணத்தில் நேற்று திடீரென வீசிய காற்றுடன் பெய்த மழை காரணமாக குறித்த இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/rS2E3F7VpIk
