ஜீ தமிழ்
சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களை தாண்டி மக்களிடம் வரவேற்பு பெற்றுவரும் ஒரு தொலைக்காட்சி ஜீ தமிழ்.
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் டிஆர்பியில் டாப்பில் எல்லாம் வந்தது, அதன்பின் எந்த ஒரு தொடரும் பெரிய அளவில் ரீச் பெறவில்லை.
நிறைய வித்தியாசமான ரசிகர்களை கவரும் வண்ணம் தொடர்கள் வந்தாலும் டிஆர்பி லிஸ்டில் இடம்பெறவில்லை.
கார்த்திகை தீபம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களில் டாப்பில் இருக்கும் தொடர் தான் கார்த்திகை தீபம்.
பாக்கியலட்சுமி நடிகர் முதல் CWC போட்டியாளர்கள் வரை.. வெளிவந்த பிக் பாஸ் சீசன் 8 உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட்
கடந்த 2023ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் கார்த்திக் மற்றும் அர்திகா முக்கிய ஜோடிகளாக நடித்து வருகிறார்கள். இதுவரை தொடர் 500க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
விரைவில் தொடர் 600 எபிசோடுகளை எட்டிவுள்ள நிலையில் அதனை ஸ்பெஷல் நிகழ்ச்சியாக கார்த்திகை தீபம் சீரியல் குழுவினர் கொண்டாட இருக்கிறார்களாம்.
ஆயுத பூஜை ஸ்பெஷலாக கார்த்திகை தீபம் 600 எபிசோட் ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.