தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிதியுதவியைக் கோரியிருந்த முன்னாள் போராளி, தமக்கு தாராளமாக உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
எதிர்மன்னசிங்கம் கிரேசியன் என்பவரே இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தடுப்பு முகாம்களிலும், சித்திரவதைக்கூடங்களிலும் கழித்துள்ள இவர், தற்போது கடுமையான உடல்நலப் பாதிப்புக்குள்ளாகி உயிருக்குப் போராடி வருகிறார்.
இதுவரை கிடைத்த நிதியுதவி மற்றும் தற்போதைய நிலை:
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் விடுத்த அவசர வேண்டுகோளின் அடிப்படையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகள் ஒன்றிணைந்து இதுவரை 31 இலட்சத்திற்கும் அதிகமான பண உதவிகளைச் செய்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் தனக்குக் கைகொடுத்த தமிழ் மக்களுக்குத் தனது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட கிரேசியன், தனது அறுவை சிகிச்சை முழுமையாக நிறைவேறுவதற்கும், தனது பிள்ளைகளுடன் மீண்டும் சந்தோஷமாக வாழ்வதற்கும் இன்னும் 50 இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
” போராளியின் உருக்கமான பகிர்வு:
இது குறித்து அவர் தனது ஆதங்கத்தைக் கண்ணீருடன் பகிர்ந்து கொள்கையில்:
“எனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. அவசரமாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சிகிச்சையை உடனடியாகச் செய்யாவிட்டால் எனது உயிர் பிரிந்துவிடும் அபாயம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் எனது மனைவியும், பிள்ளைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.
இந்த அறுவை சிகிச்சைக்குக் குறைந்தபட்சம் 70 இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. என்னிடம் அதற்கான பொருளாதார வசதி இல்லை. எனவே, எனது தமிழ் மக்கள் என்னை எந்நிலையிலும் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து எஞ்சிய தொகைக்கும் எனக்கு உதவுங்கள்” எனப் பணிவன்போடு கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்ப் ஆபத்தான நிலையில் உள்ள இந்த முன்னாள் போராளியின் சிகிச்சைக்குப் பங்களிக்க விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நற்பண்பாளர்கள், கீழே உள்ள வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது தொலைபேசி எண் வழியாகவோ நேரடியாகத்அல்லது தொலைபேசி எண் வழியாகவோ நேரடியாகத் தொடர்புகொண்டு தங்களது பங்களிப்பை வழங்க முடியும்.
நம் தேசத்திற்காகத் தன் வாழ்வைத் தொலைத்த ஒரு போராளியின் உயிரைக் காக்கவும், ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தைத் தூக்கி நிறுத்தவும் தம்மாலான உதவிகளை வழங்குமாறு உலகத் தமிழ் உறவுகளிடம் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வங்கி விபரங்கள்:
பெயர்: எதிர் மன்ன சிங்கம் கிரேசியன் (Ethirmannasingam Grashan)
வங்கி: லங்கா வங்கி (BOC)
கிளை: கல்வியங்காடு
கணக்கு இலக்கம்: 94948569
தொடர்பு இலக்கம்:
தொலைபேசி: 0775621613
