Home இலங்கை இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் கொழும்புக்கு வருகை

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் கொழும்புக்கு வருகை

0
image

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எரிக் எஸ். மயர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (24) பிற்பகல் கொழும்பை வந்தடைந்துள்ளார்.  

இலங்கைக்கான 29ஆவது அமெரிக்கத் தூதுவராகச் சேவையாற்றவுள்ள எரிக் மயர், இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தனக்குக் கிடைத்த கௌரவம் எனத் தெரிவித்துள்ளார். 

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் பலமான ஜனநாயக அத்திவாரத்தின் அடிப்படையில் உறவுகளை மேலும் கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்துதல் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் அதிகரித்த செழிப்பினை வழங்கும் வகையில் அமெரிக்க-இலங்கை பங்காண்மையை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான தூதுவராக பெயரிடப்படுவதற்கு முன்னர், இவர் நோர்வேயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளராகச் சேவையாற்றியுள்ளார். 

அத்துடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Source: https://samugammedia.com/new-us-ambassador-to-sri-lanka-arrives-in-colombo-1787574547

NO COMMENTS

Exit mobile version