Home இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முக்கிய அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முக்கிய அறிவிப்பு

0
image

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதன்படி, குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி அறிவிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் நீண்டகாலமாக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், செப்டம்பர் 22ஆம் திகதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

Source: https://samugammedia.com/important-announcement-in-the-easter-attack-case-1787580104

NO COMMENTS

Exit mobile version