Home இலங்கை கடும் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு: ரஜரட்ட பகுதியில் அபாய நிலை

கடும் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு: ரஜரட்ட பகுதியில் அபாய நிலை

0
image

இவ் ஆண்டில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, ரஜரட்ட பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் வேகமாக வற்றி வருவதாக அனுராதபுர மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் அக்டோபர் வரை ரஜரட்டப் பகுதியில் வறட்சி ஏற்படுவது இயல்பானது என்றாலும், 

இந்த ஆண்டு மிகவும் கடுமையான வறட்சி காரணமாக, ரஜரட்ட பகுதியிலுள்ள மக்களின் வாழ்க்கை, சுற்றுச்சூழல், வனவிலங்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 2,410 சிறு நீர்ப்பாசன அமைப்புகளில், 788 நீர்த்தேக்கங்கள் கிட்டத்தட்ட முழுமையாக வற்றிவிட்டன, அதே நேரத்தில் ஏனைய 612 குளங்களில் நீர்மட்டம் 5 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.

இதற்கிடையில், மொத்த நீர் விநியோகத்தில் 75 சதவீததிற்கும் அதிகமானவை வெறும் 7 பெரிய குளங்களையே சார்ந்துள்ளன.

நீர் ஆதாரங்கள் கடுமையாக வற்றியதால், குடிநீர் கிடைப்பது கடினமாகியுள்ளதுடன், விவசாயப் பணிகளுக்கும், வனவிலங்குகளின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.

Source: https://samugammedia.com/severe-drought-causing-water-shortage-danger-situation-in-rajarattai-area-1788238620

NO COMMENTS

Exit mobile version