Home இலங்கை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சாதனையாளர் மதிப்பளிப்பு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சாதனையாளர் மதிப்பளிப்பு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

0
image

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில், புதுக்குடியிருப்பு பங்கிற்ற்கு உட்பட்ட சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தன் தலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட குருமுதல்வர் இராஜசிங்கம் அடிகளார் அவர்களது ஆன்மீகத் தலைமையிலும் இடம்பெற்ற இந்த மதிப்பளிப்பு நிகழ்வானது, விருந்தினர்கள் மற்றும் சாதனையாளர் வரவேற்புடன் ஆரம்பமானது.

தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், விருந்தினர்களது உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், புதுக்குடியிருப்பு பங்கிற்குட்பட்ட சாதனையாளர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் செபஸ்தி அருள்ராஜ்குமார், வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.மதிவதனி, புதுக்குடியிருப்பு உதவிப் பிரதேசசெயலாளர் கிரிதரன் டென்சியா, புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய முதல்வர் அருட்பணி றொபின்சன் ஜோசப் அடிகளார், சட்டத்தரணி வீ.எஸ்.எஸ்.தனஞ்சயன், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முதல்வர் நேவிற் ஜீவராசாஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/achievement-award-ceremony-at-st-susaiyappar-temple-pudukkudiyiruppu-ravikaran-mp-participates-1788189974

NO COMMENTS

Exit mobile version