ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜல்தர பகுதியில் களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று (11) மாலை சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://samugammedia.com/recovery-of-body-of-unidentified-man-in-kelani-ganga-1789189954
