Home இலங்கை கொழும்பின் முக்கிய பகுதிகளில் திடீர் நீர்வெட்டு

கொழும்பின் முக்கிய பகுதிகளில் திடீர் நீர்வெட்டு

0
image

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே இந்த திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. 

இதன்காரணமாக இன்று (5) இரவு 8.00 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

Source: https://samugammedia.com/sudden-water-cut-in-major-areas-of-colombo-1780628160

NO COMMENTS

Exit mobile version