Home இலங்கை ஜூலை முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

ஜூலை முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

0
image

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கமைய, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால, கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அத்துடன், ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றம் அறிவிக்கப்பட்ட பின்னரே பேருந்து கட்டண உயர்வின் இறுதி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, எரிபொருள் விலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பேருந்து கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

Source: https://samugammedia.com/bus-fare-hike-from-july—national-transport-authority-announcement-1782446222

NO COMMENTS

Exit mobile version