Home இலங்கை டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2026: திரைப்படங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 11 இறுதித் தேதி

டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2026: திரைப்படங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 11 இறுதித் தேதி

0
image

கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறவுள்ள 7வது டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா (TTIFF) செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுயாதீன மற்றும் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்களுக்கு தங்களது படைப்புகளை சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பை இந்த விழா வழங்குகிறது.

இவ்விழாவிற்கான திரைப்பட சமர்ப்பிப்புகளின் இறுதித் தேதி ஆகஸ்ட் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது. குறும்படங்கள், முழுநீள திரைப்படங்கள், ஆவணப்படங்கள், சமூக மற்றும் இசை சார்ந்த படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படங்கள் ஏற்கப்படுகின்றன.

தமிழ் திரைப்படங்களையும் உலகளாவிய சுயாதீன சினிமாவையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த விழா, தமிழ் மற்றும் பிற நாடுகளின் கலை, கலாசாரம், சமூக வாழ்வு மற்றும் பாரம்பரியங்களை பரிமாறிக் கொள்ளும் முக்கிய மேடையாக விளங்குகிறது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

சுமார் ஐந்து இலட்சம் கனேடியத் தமிழர்களை சென்றடையும் இந்த விழா, இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியே நடைபெறும் முக்கிய தமிழ் திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. புதிய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாகவும் இது அமைகிறது.

எனவே,  https://filmfreeway.com/ttiff என்ற இணையதளத்தின் ஊடாக உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆக்குனர்கள் தங்களது படைப்புகளை ஆகஸ்ட் 11-ம் தேதிக்குள் சமர்ப்பித்து, இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். 

Source: https://samugammedia.com/toronto-tamil-international-film-festival-2026-deadline-for-submissions-is-august-11-1786383584

NO COMMENTS

Exit mobile version