Home இலங்கை தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரை சந்தித்த சிறீதரன் எம்.பி.

தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரை சந்தித்த சிறீதரன் எம்.பி.

0
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை அவரது அமைச்சு அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

 

இந்தச் சந்திப்பின்போது, சமூக நீதித்துறை அமைச்சராக தனது பொறுப்புகளை முன்னெடுத்து வரும் அமைச்சர் வன்னி அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த சிறீதரன், நினைவுப் பரிசாக புத்தகம் ஒன்றையும் வழங்கினார்.

 

சந்திப்பில் சமூக நீதி, அரசியல் மற்றும் தமிழர் சமூகத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தமிழ்நாடு முதல்வர்  C. ஜோசப் விஜய் தலைமையிலான அரசில், சமூக நீதித்துறை அமைச்சராகவும், அக்கட்சியின் மாநில விவகாரங்கள் குறித்த கொள்கைக் குழுவின் அங்கத்தவராகவும் பணியாற்றி வரும் ஒரு மூத்த அரசியல் தலைவராக வன்னி அரசு விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: https://samugammedia.com/mp-sreetharan-met-the-tamil-nadu-minister-of-social-justice-1782281295

NO COMMENTS

Exit mobile version