Home இலங்கை தொடர்ச்சியாக 66 நிமிடங்கள் பானை மேல் நின்று நடனம் – கிளிநொச்சி ஆசிரியை சாதனை

தொடர்ச்சியாக 66 நிமிடங்கள் பானை மேல் நின்று நடனம் – கிளிநொச்சி ஆசிரியை சாதனை

0
image

கிளிநொச்சி பிரசாந்தினி நர்த்தனாலயத்தின் நடன ஆசிரியர் அருணாச்சலம் கேனுஷா நடனத்தில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

குறித்த நிகழ்வு நேற்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அவர் ஒரு மணித்தியாலம் ஆறு நிமிடங்கள் பானையில் நின்றபடி தொடர்ந்து நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த சாதனை, “RAABA” சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வில் “RAABA” சாதனை புத்தகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி யோகதாசன் யூட் நிமலன் கலந்து கொண்டு, குறித்த சாதனைக்கான சான்றிதழை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரசாந்தினி நர்த்தனாலயத்தின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சாதனையை பாராட்டினர்.

Source: https://samugammedia.com/elephant-kills-farmer-who-went-to-protect-his-field–early-morning-grief-in-kandhalai-1783071495

NO COMMENTS

Exit mobile version