Home இலங்கை பதுளை–நானுஓயா ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்

பதுளை–நானுஓயா ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்

0
image

டித்வா புயல் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில் பாதை சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை–அம்பேவெல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளன.

23 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சீரமைப்பு பணிகளின் பின்னர் இந்த சேவை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளையிலிருந்து நானுஓயா வரை தினமும் 4 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன. 

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு முதல் பதுளை வரை முழுமையான ரயில் சேவையை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவையை பயன்படுத்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.

Source: https://samugammedia.com/badulla-nanu-oya-train-service-to-resume-from-today-1781938188

NO COMMENTS

Exit mobile version