Home இலங்கை பிள்ளையானின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

பிள்ளையானின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

0
image

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று (13) அழைக்கப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய வழக்கு விசாரணையின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இணையவழி தொழிநுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/the-childs-explanation-persists-even-further-1783935346

NO COMMENTS

Exit mobile version