Home இலங்கை புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை! – குருநாகலில் பயங்கரம்

புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை! – குருநாகலில் பயங்கரம்

0
image

குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

உயிரிழந்த இளைஞர் பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியைக் காதலித்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் பின்னர் அவர் பன்னலையில் உள்ள மனைவியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு ஓட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மூவர், மேற்படி இளைஞர் மீது கொடூரமான முறையில் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

பயங்கர காயங்களுக்குள்ளான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு அல்லது காதல் விவகாரம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/brutal-murder-of-a-newlywed—horror-in-gurunagar-1782870427

NO COMMENTS

Exit mobile version