Home இலங்கை குற்றம் குற்றப் புலனாய்வு பிரிவினர் மீது குற்றம் சுமத்தும் பியுமி

குற்றப் புலனாய்வு பிரிவினர் மீது குற்றம் சுமத்தும் பியுமி

0

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னை துன்புறுத்துகின்றனர் என பிரபல மாடல் அழகி பியுமி ஹன்சமாலி( Piumi Hansamali ) குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது உள ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் பியுமி பதிவொன்றை இட்டதன் மூலம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

குற்றச் செயல் 

போதைப் பொருள் குற்றச் செயல் சம்பவமொன்றில் தொடர்புபடுத்த வேண்டுமென்றே திட்டமிட்டு முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மோட்டார் வாகனத்தை விற்பனை செய்து ஓராண்டு காலம் கடந்துள்ளதாகவும், இந்த வாகனத்தை வைத்திருந்த நபர் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரின் மனைவி தனது பழைய நண்பி எனவும் இதனால் தவணை அடிப்படையில் வாகனத்திற்கு பணம் பெற்றுக்கொள்ள இணங்கியதாகவும் கூறியுள்ளார்.

நிலுவை தொகை

50 இலட்சம் ரூபா பணம் வழங்கியதாகவும் இன்னமும் 50 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும், கொடுக்க வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதாகவும் இதனால் வாகனம் இன்னமும் தமது பெயரிலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வாகனமொன்றை விற்பனை செய்யும் போது அவர்களின் ஜாதகத்தை பார்த்து விற்பனை செய்ய நேரிட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய வாகனத்தை கொள்வனவு செய்ததன் காரணமாக தாம் இன்னமும் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும், நூற்றுக்கு நூறு வீதம் தாம் நிரபராதி எனவும், போதைப் பொருட்களை விற்பனை செய்யவில்லை எனவும் பியுமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version