Home இலங்கை அரசியல் சுகாதார தொண்டர் விவகாரம்: டக்ளஸ் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

சுகாதார தொண்டர் விவகாரம்: டக்ளஸ் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

0

வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர் அடிப்படையில் சிற்றூழியர்களாக
பணியாற்றுபவர்களது நிரந்தர நியமனம் தொடர்பில் விரைவில் தீர்வு காணப்படும் என
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று(07.07.2024) நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

குறிப்பாக நீண்டகால சேவை சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் வைத்தியசாலையால்
உறுதிப்படுத்தப்படும் சுகாதார தொண்டர்களின் பட்டியல் உறுதிப்படுத்தப்பட்டு
நியமனம் வளங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரிடம் கோரிக்கை 

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் தமது தொழிலில் நிரந்தர
நியமனம் இன்றிப் பல வருடங்களாக கடமையாற்றி வருகின்ற நிலையில் நிரந்தர நியமனம்
தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த சுகாதார தொண்டர்கள் தமது வாழ்வாதாரத்துக்கான பொருளாதார ஈட்டலுக்கான
தொழிலாக குறித்த தொழிலை நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பல
துன்பங்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருவதாகவும், நீண்டகாலமாக இவ்வாறு
பணியாற்றி வந்தாலும் இதுவரை நிரந்தர நியமனம் கிடைக்காமையால் தமது வாழ்வு
கேள்விக்குறியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி நிரந்தர நியமனத்தை
விரைவுபடுத்தி தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

நீண்டகால பிரச்சினையாக இருந்துவந்த சுகாதார தொண்டர்களின் கோரிக்கைகளின்
நியாயத்தை கருத்திற்கொண்ட அமைச்சர் அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க கடும்
முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்துள்ளார்.

இந்நிலையில், அதற்கான ஏதுநிலைகள் கூடிவரும் நிலையிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version