Home இலங்கை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியது – பயனர்கள் பாதிப்பு!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியது – பயனர்கள் பாதிப்பு!

0
image

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் இன்று திடீர் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், பல பயனர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, மெட்டா (Meta) நிறுவனத்தின் பேஸ்புக் தளத்தின் டெஸ்க்டொப் (Desktop) பதிப்பே இந்தச் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயனர்கள் உள்நுழைய முயன்றபோது, “தளச் சிக்கல் காரணமாக உங்கள் கணக்கு தற்போது கிடைக்கவில்லை. இது விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தயவுசெய்து சில நிமிடங்களில் மீண்டும் முயற்சிக்கவும்” என்ற அறிவிப்பு காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று முற்பகல் 9.00 மணியளவில் “Facebook Down” தொடர்பான முறைப்பாடுகள் திடீரென அதிகரித்துள்ளதாக சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் DownDetector இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்ப பிரச்சினைக்கான காரணம் குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வ விளக்கமொன்றை வெளியிடவில்லை.

Source: https://samugammedia.com/facebook-and-instagram-social-networks-went-down—users-affected-1784453927

NO COMMENTS

Exit mobile version