Home முக்கியச் செய்திகள் ’’மனைவிக்கு மாதவிடாய் ’’ ; சார்ஜன்ட் பணிநீக்கம்

’’மனைவிக்கு மாதவிடாய் ’’ ; சார்ஜன்ட் பணிநீக்கம்

0

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக, உலோகப் பொருட்களைக் கண்டறியும் நவீன ஸ்கேனர் (Scanner) இயந்திரத்தைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட பிரிவை சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில், கைவேலி இராணுவ முகாமிற்கு அருகில் புதுக்குடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் நடத்திய வாகனச் சோதனையின் போது, இவர்கள் பயணித்த சொகுசு கார் மறிக்கப்பட்டது. புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்களுடன் குறித்த சி.ஐ.டி சார்ஜன்ட் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சார்ஜன்ட், தனது மனைவிக்கு உடல்நலக்குறைவு (மாதவிடாய்) ஏற்பட்டுள்ளதாக கூறி, பணிக்கு சமூகமளிக்க முடியாது என விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் பொய் கூறிவிட்டு, முல்லைத்தீவு பகுதியில் புதையல் தோண்டுவதற்கு சென்றுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸ் சேவையின் ஒழுக்க கோவையை மீறி, இத்தகைய சட்டவிரோத மற்றும் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டமைக்காகவே குறித்த சார்ஜன்ட்டின் பணி உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/150-378364

NO COMMENTS

Exit mobile version