Home இலங்கை மாவிட்டபுரம் கந்தனுக்கு இன்று கொடியேற்றம் – பக்தர்கள் பெருந்திரள்

மாவிட்டபுரம் கந்தனுக்கு இன்று கொடியேற்றம் – பக்தர்கள் பெருந்திரள்

0
image

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய 2026 மகோற்சவப் பெருவிழா இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

முருகப்பொருமானுக்கு அதிகாலையில் இருந்து சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று காலை மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்று, முருகப் விநாயகப் பெருமான், சிவன், உமாதேவியார்  சமேதராயும் மற்றும் முருகப் பொருமான் வள்ளி தெய்வானை சமேதராயும், வசந்த மண்டபத்திலிருந்து  கொடித் தம்பம்  எழுந்தருளி கொடியேற்றம்  சிறப்பாக நடைபெற்றது.

மாவை கந்தனின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி  தேர்த் திருவிழாவும்  12 ஆம் திகதி ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித  தீர்த்தத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

 நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும்   ஏராளமான பக்தர்கள் கந்தனின் கொடியேற்றத் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

Source: https://samugammedia.com/mavittapuram-kandans-flag-hoisting-today—devotees-celebrate-grandly-1784456607

NO COMMENTS

Exit mobile version