Home உலகம் அமெரிக்க அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் : வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் : வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

0

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டரம்ப் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

 இதேவேளை ட்ரம்ப்பின் எதிரியாக அறியப்பட்ட ஓஹியோவைச் சேர்ந்த செனட்டரான ஜே.டி.வான்ஸ் என்பவரை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் எதிரி துணை அதிபர் வேட்பாளர்

39 வயதான வான்ஸ், நேற்று (15) நடைபெற்ற குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் மாநாட்டில் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் என்று கட்சிப் பிரதிநிதிகளின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்.

டிரம்ப் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு பதிவில், நீண்ட கால ஆலோசனைக்குப் பிறகு வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

பிரசார கூட்டத்தில் துப்பாக்கி சூடு

பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் முன்னாள் அதிபர் மொனால்ட் டரம்பின் காதில் காயம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே ட்ரம்ப்பை அதிபர் தேர்தலில் நிறுத்த குடியரசு கட்சி அனுமதி அளித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version