Home இலங்கை முதலைத் தாக்கி படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி! – மாது ஆற்றில் துயரம்

முதலைத் தாக்கி படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி! – மாது ஆற்றில் துயரம்

0
image

மாது ஆறு பகுதியில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் மீது முதலை ஒன்று திடீரெனத் தாக்கியதில், படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் நேற்று (25) காலை பதிவாகியுள்ளது.

அம்பலாங்கொடை – வத்துகெதர பகுதியைச் சேர்ந்த இருவர் மாது ஆற்றில் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென வெளிப்பட்ட முதலை, அவர்கள் பயணித்த படகை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் காரணமாக படகு தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

இதன்போது நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வத்துகெதர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/young-man-dies-as-boat-capsizes-after-crocodile-attack—sadness-in-madhu-river-1782450725

NO COMMENTS

Exit mobile version