Home இலங்கை முல்லைத்தீவில் கோர விபத்து; ஒரு மணிநேரப் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சாரதி! வீதியில் சிதறிய இளநீர்கள்

முல்லைத்தீவில் கோர விபத்து; ஒரு மணிநேரப் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சாரதி! வீதியில் சிதறிய இளநீர்கள்

0
image

முல்லைத்தீவு – கொக்காவில் பகுதியில் யாழ்ப்பாணம்–கண்டி வீதியில் இன்று (09.08.2026) அதிகாலை மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், மகேந்திரா ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் காயமடைந்த பாரவூர்திச் சாரதி, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

அத்துடன், மகேந்திரா ரக வாகனத்தில் விற்பனைக்காக பெருமளவு இளநீர்கள் எடுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், விபத்தையடுத்து அவை வீதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சிதறிக் கிடந்தன.

விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/major-accident-in-mullaitivu-driver-rescued-after-an-hour-long-struggle-young-people-scattered-on-the-road-1786269103

NO COMMENTS

Exit mobile version