Home இலங்கை வடக்கு சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; நேர்முகத் தேர்வு ஆரம்பம்

வடக்கு சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; நேர்முகத் தேர்வு ஆரம்பம்

0
image

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் காணப்படும் சுகாதாரப் பணி உதவியாளர் (தரம் III) பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இன்று (03) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 852 வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், முதல் கட்டமாக 300 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த நேர்முகத் தேர்வுகள் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த நேர்முகத் தேர்வுகள் ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அதற்காக ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

தினமும் மூன்று அமர்வுகளாக தேர்வு நடத்தப்பட்டு வருவதுடன், விண்ணப்பதாரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

இதுவரை நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள், ஆகஸ்ட் 5ஆம் திகதிக்குப் பின்னர் 021 222 0807 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு, தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணை வழங்கி தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/300-vacancies-in-the-northern-health-department-interviews-begin-1785746556

NO COMMENTS

Exit mobile version