Home இலங்கை வாழ்வதற்கு விருப்பமில்லை! யாழில் இரட்டைச் சகோதரிகள் தீ மூட்டி உயிரிழப்பு

வாழ்வதற்கு விருப்பமில்லை! யாழில் இரட்டைச் சகோதரிகள் தீ மூட்டி உயிரிழப்பு

0
image

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.

நேற்று (01) வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், குறித்த இருவரும் தமக்கு தாமே தீ மூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (02) அதிகாலை இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்ததாக, உயிரிழப்பதற்கு முன்னர் அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/dont-want-to-live-twin-sisters-die-in-fire-in-jaffna-1785654468

NO COMMENTS

Exit mobile version