Home உலகம் இந்த ஆண்டு கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை!

இந்த ஆண்டு கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை!

0

உலகளவில் இந்த ஆண்டு (2024) 104  ஊடகவியலாளர்கள்  கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists) தெரிவித்துள்ளது.

சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு இன்றையதினம் (10.12.2024) அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் பதிவான 104 கொலைகளில் பாதி காசாவில் (Gaza) நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்

2024 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் (Israel)  நடத்திய தாக்குதலில் போர் களத்தில் செய்தி சேகரித்த 55 பலஸ்தீனிய ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டு உலகளவில்  129 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் இறப்பு குறைந்துள்ளது.

மேலும் இது தொடர்பில்  IFJ பொதுச் செயலாளர் அந்தோனி பெல்லாங்கர் கருத்து தெரிவிக்கையில் “கடந்த ஆண்டு  29 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் இறப்பு குறைந்திருந்தாலும் கூட இது மோசமான ஆண்டுகளில் ஒன்றாகவும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான ஆண்டாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

IFJ கூட்டமைப்பு

மேலும் காசாவில் கடந்த “அக்டோபர் 7, 2023 அன்று போர் தொடங்கியதிலிருந்து, குறைந்தது 138 பலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று IFJ கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

மேலும் காசாவில் களத்தில் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் தவிர்த்து , வேண்டுமென்றே பல ஊடகவியலாளர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்று  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிற்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக ஆசிய நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆசிய நாடுகளில் 20 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version