Home உலகம் பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

0

பிரித்தானியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அலைபேசிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் இன்று அவசர எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டார்ராக் புயல் (Storm Darragh) பிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்தான வானிலை சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதை அடுத்தே அந்நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இன்று(06) மாலை 6.45 மணியளவில் அரசாங்கம் இந்த அவசர எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக அந்நாட்டு  அமைச்சரவை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அவசர எச்சரிக்கை

அத்துடன், சேதத்தை ஏற்படுத்தும் காற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய இடையூறுகள் பிரித்தானியர்களை அச்சுறுத்தலாம் என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புவதாக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டிசம்பர் 7ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் காலை 11 மணி வரை பிரித்தானியா மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், புயலின் தீவிரம் நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளில் அலைபேசி சிக்னலை பாதிக்கலாம் என்று வானிலை அலுவலகம் எதிர்பார்க்கும் நிலையில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version