Home முக்கியச் செய்திகள் சிறிலங்கா காவல்துறையின் முக்கிய புள்ளிகளுக்கு அதிரடி இடமாற்றம்

சிறிலங்கா காவல்துறையின் முக்கிய புள்ளிகளுக்கு அதிரடி இடமாற்றம்

0

11 மூத்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பின்வரும் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களான டபிள்யூ.வி.ஜினி மாத்தறை பிரிவு பொறுப்பதிகாரியாகவும், கே.டி.ஜே.எல்.ஏ. தர்மசேன, நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பதிகாரியாகவும், B.D.T.P.A. வீரசிங்க, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பணிப்பாளராகவும், ஆர்.ஜி.எ.பி. குணதிலக்க களனி பிரிவு பொறுப்பதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றங்கள்

மேலும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எல்.ஆர். கமகே குற்றத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் சாட்சி ஆதரவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக, டி.எஸ்.ஐ.எ.அமரசிங்க நாடாளுமன்ற பிரிவு பணிப்பாளராக , மாத்தளை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக மங்கள விக்கிரமநாயக்க, கே.எம்.ஈ.பெரேரா, IGP கட்டளையின் தகவல் பிரிவின் பணிப்பாளராக, H.G.D.S. அமரசிங்க அம்பாறை பிரிவு பொறுப்பதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.சோமரத்ன வவுனியா பிரிவு பொறுப்பதிகாரியாகவும், டி.எச்.ஈ.எல். பெரேரா கம்பளை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version