Home இலங்கை அரசியல் ஜனாதிபதித் தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

ஜனாதிபதித் தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளும் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு உள்ளிட்ட சகல செயற்பாடுகளையும் அவதானித்து அறிக்கையொன்றை வழங்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/12-countries-to-observe-the-presidential-election-1724409504

NO COMMENTS

Exit mobile version