Home உலகம் மத்திய அமெரிக்காவில் கோர விமான விபத்து : பிரபல இசையமைப்பாளர் உட்பட பலர் பலி

மத்திய அமெரிக்காவில் கோர விமான விபத்து : பிரபல இசையமைப்பாளர் உட்பட பலர் பலி

0

மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ்(Honduras) அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஆரேலியோ மார்ட்டினஸ்(Aurelio Martinez Suazo) உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோட்டின் தீவிலிருந்து லா சிபாவுக்கு நேற்று முன்தினம் (17) இரவு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் ஆற்றில் விழுந்ததால் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.

 பிரபல இசையமைப்பாளர்

விமானத்தில் பயணம் செய்த 17 பேரில் 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

கரிபுனா இசைக்குழுவில் இணைந்து சர்வதேச அங்கீகாரத்தை பெற்றவர் ஆரேலியா. அந்த நாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருந்தவர். அவரது மறைவிற்கு ஹொண்டுரான் ஜனாதிபதி சியோமாரா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை

 விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் ரோட்டனின் மேயர் உள்ளூர் ஊடகங்களுக்கு இது வானிலை காரணமாக இல்லை என்றும், அது சாதாரணமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக ஹோண்டுரான் சிவில் ஏரோநாட்டிக்ஸ் முகவரமைப்பு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version