Home முக்கியச் செய்திகள் பேருந்து விபத்தில் சிக்கி 9 பாடசாலை மாணவர்கள் படுகாயம்!

பேருந்து விபத்தில் சிக்கி 9 பாடசாலை மாணவர்கள் படுகாயம்!

0

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பாடசாலையொன்றை சேர்ந்த சாரணர் குழுொன்று படுவத்தை மகா வித்தியாலயத்தில் நடந்த நிகழ்வொன்றில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்த போது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்து வீதியோர தடுப்பில் மோதி கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காவல்துறை சந்தேகம்

எனினும், பேருந்தின் ப்ரேக் செயலிழந்தது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் 20 மாணவர்கள் பயணித்துள்ளனர்.

ராகம காவல்துறையினர் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version