ஊழல் தடுப்புச் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க, சட்டத்தில் பல அவசர திருத்தங்கள் குறித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளார்.
இந்தச் சட்டத்தின் ‘சிங்கள மற்றும் ஆங்கில’ மொழி ஊடக உள்ளடக்கத்தில் உள்ள வேறுபாடுகள் காரணமாக எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து தாம் கவனத்தை ஈர்ப்பதாக ரங்க திசாநாயக்க தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு விளக்கம் வழங்கியுள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில பதிப்புகளுக்கு இடையில் வேறுபாடுகள் இருந்தாலும், நடைமுறையில் இருப்பது சிங்கள பதிப்புதான் என்று அவர் கூறியுள்ளார்.
நடைமுறைச் சிக்கல்
இருப்பினும், இந்த நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து சிங்கள மற்றும் ஆங்கிலச் சட்டங்களுக்கு இடையிலான பிழைகளைச் சரிசெய்ய அவசரத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் திருத்தப்பட வேண்டும் என்று லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, சிங்கள மற்றும் ஆங்கில சட்டங்களுடனான முரண்பாடுகளை சரிசெய்து, முழு சட்டமும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
