Home உலகம் பிரித்தானியாவுக்குள் ஒரேநாளில் புகுந்த பெருமளவு சட்டவிரோத குடியேறிகள்

பிரித்தானியாவுக்குள் ஒரேநாளில் புகுந்த பெருமளவு சட்டவிரோத குடியேறிகள்

0

ஆங்கிலக்கால்வாயை கடந்து பிரித்ததானியாவுக்குள் நுழையும் குடியேறிகளின் பிரச்சனை பிரித்தானிய அரசாங்கத்துக்கு பெரும் தலையிடியாக உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் பல சிறிய படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

இது இந்தவருடத்தில் ஒரே நாளில் ஆங்கிலகால்வாயை சட்டவிரோதமாக கடந்த குடியேறிகளின் சாதனை அளவாகும்.

நேற்று அதிகாலை முதல் காலநிலை நன்றாக இருந்தால் இந்த சந்தர்ப்பத்தைப்பயன்படுத்திய சட்டவிரோதக்குடியேறிகள் பிரான்சில் கடற்கரைகளில் இருந்து அதிகளவில் பிரித்தானியாவை நோக்கி பயணப்பட்டுள்ளனர்.

மீட்பு முயற்சி

நூற்றுக்கணக்கா குடியேறிகள் ஆங்கிலக்கால்வாயை கடக்கும் வகையில் பல படகுகளில் ஏறியபோது அந்த வெளியேற்றத்தை தடுக்கமுடியாமல் பிரெஞ்சு காவற்துறையினர் வேடிக்கை பார்த்ததாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரேநாளில் அதிகளவில் குடியேறிகள் ஆங்கிலக்கால்வாயை கடந்ததால் அவர்களை பாதுகாப்பாக மீட்க முடியாமல் திணறிய பிரித்தானிய எல்லைகாவல் படகுகள் இந்த மீட்பு முயற்சிக்கு மீன்பிடிப்படகுகளின் உதவியையும் நாடியிருந்தன.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

தரையிறங்கியவர்களின் ஒருபகுதியினர் டோவர் துறைமுகத்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் செயலாக்க மையத்தால் கையாளப்பட்டதாகவும் டோவர் மற்றும் அருகில் உள்ள கடற்கரைகளில் நேற்று மட்டும் மொத்தமாக ஆயிரத்து இருநூறு குடியேறிகள் நுழைந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரேநாளில் இவ்வாறு அதிகளவு குடியேறிகள் நுழைந்ததை தடுக்கமுடியாத தொழிற்கட்சி அரசாங்கம் பிரித்தானியாவின் எல்லைக்கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version