Home இலங்கை அரசியல் முன்னணியின் பொய் அம்பலம்: 13 ஆம் திருத்தமே ஆரம்ப புள்ளி

முன்னணியின் பொய் அம்பலம்: 13 ஆம் திருத்தமே ஆரம்ப புள்ளி

0

தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் மேற்கொண்ட கூட்டு ஒரு கொள்கை கூட்டு என்று கூறப்பட்டது.

தமிழ் தேசிய அரசியலில் 13 ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் துரோகிகள் என இதுவரைகாலமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

தற்போது 13 ஆம் திருத்தத்தை ஆரம்ப புள்ளியாக ஏற்று கொள்கை கூட்டுக்குள் வந்துள்ளதாக ஈபிஆர்எல் எவ் கட்சியை சேர்ந்த க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கடந்த முறை பங்குகொண்ட காண்டீபன் 13 ஆம் திருத்தத்தை ஆரம்ப புள்ளியாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை முடிந்தால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை கூப்பிட்டு கேட்டு பாருங்கள் என களம் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த ஈபிஆர்எல்எவ் கட்சியை சேர்ந்த க.சர்வேஸ்வரனை கேட்ட போது 13 ஆம் திருத்தத்தை ஆரம்ப புள்ளியாக ஏற்றுதான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எங்களுடன் கொள்கை இணக்கத்திற்கு வந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் கூட்டு தொடர்பான ஒப்பந்தத்தில் 13 ஆம் திருத்தத்தை நிராகரிக்கவில்லை என்பது மிகப்பெரிய விமர்சனமாகியது.

அதனை தீர்வாக நாங்கள் ஏற்கவில்லைதானே என கூறி சமாளிக்க முற்பட்டார்கள் தற்போது 13 ஆம் திருத்தத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொண்டிருக்கின்றார் என்பது முன்னணியின் ஆதரவாளர்களுக்கே அதிர்ருப்தி கொடுப்பதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இவ்விவகாரம் தொடர்பிலும், சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பிலும் சர்வேஸ்வரன் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சி,

🛑 அத்தோடு, காண்டிபன் தெரிவித்த கருத்துக்களை ஆராய குறித்த காணொளியை பார்வையிடுங்கள்…!

 

https://www.youtube.com/embed/DTzg3RaibUIhttps://www.youtube.com/embed/D2fW1axnr1Q

NO COMMENTS

Exit mobile version