Home ஏனையவை ஆன்மீகம் புஸல்லாவையில் அமையப்போகும் 16 அடி உயரமான கற்பக விநாயகர் சிலை

புஸல்லாவையில் அமையப்போகும் 16 அடி உயரமான கற்பக விநாயகர் சிலை

0

Courtesy: Aadhithya

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 16 அடி உயரம் கொண்ட இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள பிள்ளையார்பட்டி கற்பக வியாகர் சிலையை ஒத்த குகை சிலை புஸ்ஸல்லாவயில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

குறித்த பிரதிஷ்டை நிகழ்விற்கான பூமி பூஜை எதிர்வரும் செப்டெம்பர் 08 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன் முதல் கட்டமாக அன்றைய தினம் (08) புதிதாக அமைக்கப்பட்ட வழி பிள்ளையருக்கான சன்னதி கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

விநாயகர் பிரதிஷ்டை

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 07 ஆம் திகதி பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று எண்ணெய் காப்பும் செப்டெம்பர் 06ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு பூஜைகளும் விநாயகர் பிரதிஷ்டையும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பதோடு மேற்படி பதினாறு அடி கொண்ட கற்பக விநாயகர் சிலை இந்தியா – தமிழ்நாடு பிள்ளையார்பட்டி ஆலய வளாகத்தில் செதுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கையில் காணப்படும் மிக உயரமான கற்பக விநாயகர் சிலை இதுவாகவே அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிலையானது கண்டி – நுவரெலியா பிரதான பாதையில் புஸ்ஸல்லாவ நகரத்தை குறிக்கும் ஆரம்பப் பகுதியிலேயே பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த சிலை, உல்லாச பயணிகளை மிகவும் கவர்ந்ததாக அமையும் என்பதுடன் இந்த தெய்வீக உன்னத பணியில் இலங்கையில் வாழும் பக்த அடியார்கள் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version