Home இலங்கை அரசியல் கிளிநொச்சியில் முகம் சுளிக்கும் செயலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த சுமந்திரன்..! விஜிதாவுக்கு நீதி...

கிளிநொச்சியில் முகம் சுளிக்கும் செயலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த சுமந்திரன்..! விஜிதாவுக்கு நீதி கிடைக்குமா

0

கிளிநொச்சியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

அதற்கிடையில், 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குறித்த பயிற்றுவிப்பாளர் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவர் என்ற நிலையில், அக்கட்சி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது தொடர்பில் தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்த பயிற்றுவிப்பாளரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து உடனடியாக இடைநிறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். 

சுமந்திரனின் குறித்த நடவடிக்கை கட்சி ரீதியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபக்கம் மக்கள் மத்தியில் கேள்வி ஒன்றினையும் எழுப்பியுள்ளது. 

கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்த வலி.வடக்கு பிரதேச சபை ஊழியர் விஜிதா என்பவரின் மரணம் தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்ப்படுகின்றது. 

இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version