Home முக்கியச் செய்திகள் விவசாயிகளின் உரமானிய பணத்தில் பெரும் மோசடி: பெண் ஊழியர் கைது!

விவசாயிகளின் உரமானிய பணத்தில் பெரும் மோசடி: பெண் ஊழியர் கைது!

0

விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் அநுராதபுர அலுவலகக பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2024/25 பெரும்போக காலப்பகுதிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணத்தில் 2.6 மில்லியன் ரூபாயை சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

you may like this

https://www.youtube.com/embed/bK24YBJPc6k

NO COMMENTS

Exit mobile version