Home உலகம் இந்தியாவில் இரவு நேரம் போர் விமானம் வெடித்து சிதறியதால் பரபரப்பு

இந்தியாவில் இரவு நேரம் போர் விமானம் வெடித்து சிதறியதால் பரபரப்பு

0

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2 விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் இரவு 9.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஒரு விமானியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இரவு நேரம் விமானம் வெடித்து சிதறியதால் பரபரப்பு

மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு நேரத்தில் பயிற்சி விமானம் வெடித்துச் சிதறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version