Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தமிழரசுக் கட்சியில் களமிறங்கும் ஊடகவியலாளர் நிலாந்தன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தமிழரசுக் கட்சியில் களமிறங்கும் ஊடகவியலாளர் நிலாந்தன்

0

மட்டக்களப்பு (Batticaloa) – ஏறாவூர் (Eravur) பற்று பிரதேச சபை தேர்தலில் இம்முறை சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாந்தன் போட்டியிடவுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு, ஏறாவூர் பற்று பிரதேச சபை தேர்தலில் செங்கலடி ஆறாம் வட்டார வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் அவர் இன்று(18) கையொப்பம் இட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி இம்முறை ஒன்பது உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி சபை தேர்தல்

இந்நிலையில், ஏறாவூர் பற்று பிரதேசத்தில் ஊடகவியலாளராகவும், சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஊடகவியலாளர் நிலாந்தனின் அரசியல் பிரவேசம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கலடி பிரதேசத்தில் வசிக்கும் ஊடகவியலாளர் நிலாந்தன் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதில் மிகத் தீவிரமாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version