Home இலங்கை அரசியல் ஒரு வாக்காளருக்கு செலவிடப்படும் தொகை 20 ரூபா : ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள கோரிக்கை

ஒரு வாக்காளருக்கு செலவிடப்படும் தொகை 20 ரூபா : ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள கோரிக்கை

0

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடப்படும் தொகை அதிகபட்சமாக 20 ரூபாவிற்கு உட்பட்டதாக இருக்கும் என குறிப்பிட்டு ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு (Election Commission of Sri lanka) ஜனக ரத்நாயக்க கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

தேர்தல் செலவுக் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணைக்குழு நடத்திய கருத்துக் கணிப்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகியன ஒரு வாக்காளருக்கு 300 ரூபா மற்றும் 250 ரூபா என பரிந்துரைத்தனர்.

பரிந்துரைத்த தொகை

அத்துடன் தேசிய மக்கள் சக்தி (JVP) வாக்காளருக்கு 200 ருபா எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) 250 ரூபாவை பரிந்துரைத்ததாகவும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேட்பாளர்கள் பரிந்துரைத்தபடி தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட பெருந்தொகையில் பாரிய சிக்கல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அதிகபட்ச தொகையை 20 ரூபாவாக தீர்மானிக்குமாறு கேட்டுக் கொள்வதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version