Home இலங்கை பொருளாதாரம் புதிய அரசாங்கத்தில் தொடரும் ரணிலின் மற்றுமொரு பொருளாதார திட்டம்

புதிய அரசாங்கத்தில் தொடரும் ரணிலின் மற்றுமொரு பொருளாதார திட்டம்

0

Courtesy: Sivaa Mayuri

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதவி திட்டத்தின் இரண்டாம் கட்ட 200 மில்லியன் டொலர்களுக்காக இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் உடன்படிக்கை ஒன்றில் இன்று கைச்சாத்திட்டுள்ளன.

நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத் திருப்பம் மற்றும் அபிவிருத்தி கொள்கை நடவடிக்கைகள் தொடர்பிலேயே இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக கொள்ளப்பட்டுள்ளது.

சீர்திருத்த நடவடிக்கைகள்  

இந்நிலையில், முதல் நடவடிக்கையின் படி, மொத்தம் 500 மில்லியன் டொலர்கள், 2023ஆம் ஆண்டு ஜூன் மற்றும் டிசெம்பர் மாதங்களில் உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

இந்த திட்டம், பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்தும் மற்றும் ஏழைகள், பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்கும் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன், பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, ஒரு நிலையான பெரிய பொருளாதார சூழலை உருவாக்குவதுடன் முக்கிய சீர்திருத்தங்கள் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version