Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சிக்குள் இருந்து வெளியேறிய சட்டத்தரணி உமாகரன்

தமிழரசுக் கட்சிக்குள் இருந்து வெளியேறிய சட்டத்தரணி உமாகரன்

0

தமிழரசுக் கட்சியில் இருந்தும், இதுவரை தமிழரசுக் கட்சிக்கு வழங்கி வந்த ஆதவில் இருந்தும் விலகிக் கொள்வதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணி உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார். 

தமிழரசுக் கட்சியிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்  செயல்படும் சிலர் கட்சிக்குள் இருக்கும் வரை மீண்டும் கட்சியோடு இணைந்து செயற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆதரவை  விலக்கிக் கொள்கிறோம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தலைவரால் காட்டப்பட்ட சின்னம் என்ற வகையில்  நாங்கள் தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவும், மற்றும் தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு தெடாடர்ச்சியான ஆதவையும் இதுவரை நாட்கள் நாங்கள் வழங்கி வந்தோம். 

நாடாளுமன்றத் தேர்தல் உட்பட கடந்த காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் கட்சிக்காக பணியாற்றியுள்ளோம். கட்சி சார்ந்த வழக்குகளில் முன்னிலையாகியிருக்கின்றோம். குறிப்பாக ஊதியம் ஏதும் இன்றி கட்சி சார்ந்த வழக்குகளில் முன்னிலையாகியிருக்கின்றோம். 

இவ்வாறு நாங்கள் தொடர்ச்சியாக கட்சியோடு நின்ற போதிலும், நான் உட்பட ஏராளமான புத்திஜீவிகளும், இளம் சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட இதர தொழிலில் இருக்கக் கூடியவர்களும், கட்சியினுடைய விசுவாசிகளும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்ட நிலைப்பாட்டை சமகால வேட்பாளர் தெரிவில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

அதன் அடிப்படையில்  கட்சியின் சகல நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதோடு,  கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தும் நாங்கள் விலகிக் கொள்கின்றோம்.

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும், தமிழ்த் தேசிய கொள்கைக்கும் நலன்களுக்கும் களங்கம் விளைவிக்கும்  விதமாகவும் செயற்படும் நபர்கள் அந்தக் கட்சிக்குள் இருக்கும் வரைக்கும் மீள அந்தக் கட்சியோடு இணைந்து செயற்பட மாட்டோம் என்ற முடிவை அறிவிக்கின்றோம்.

நானும், என்னோடு இருக்கும் ஆதரவாளர்களும் கட்சிக்கு ஆதரவு வழங்குவதை தளர்த்திக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version