Home இலங்கை சமூகம் பொலிஸாருக்கு எதிராக ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிராக ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள்

0

பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் 0718598888 என்ற வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பொதுமக்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக அவர் பொலிஸ் மா அதிபராக பதவியேற்றவுடன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.


முறைப்பாடுகள்

பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகள் குறித்து கவலைப்பட்டால் அல்லது அவர்கள் பொதுமக்களுக்கு சரியான சேவையை வழங்கவில்லை என்றால், பொது மக்கள் வட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version