மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Rathwatte) இறுதிக்கிரியைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் லொஹான் ரத்வத்தவின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இன்று (15) இரவு முதல் மஹியாவில் உள்ள அன்னாரது இல்லத்தில் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இறுதி கிரியைகள்
அதற்கமைய, நாளை மறுதினம் மாலை 5 மணிக்கு கண்டியில் உள்ள நிட்டவெல குடும்ப மயானத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளன.
கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று (15) தமது 57 வது வயதில் காலமானார்.
