Home இலங்கை அரசியல் தேர்தலை நோக்கிய அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை போட்டுடைத்த கர்தினால்

தேர்தலை நோக்கிய அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை போட்டுடைத்த கர்தினால்

0

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசித்திரமான வேதனையுடன் பேசும் அரசியல்வாதிகளால் எந்த பயனும் இல்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்  (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.

கந்தானை – ஹப்புகொட மீசாமே பொல்கஹஹேனவில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் நிறைவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களாக முயற்சி

அதன்போது, முன்னர் ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத அரசியல் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது இது பற்றி விசித்திரமான வேதனையுடன் பேசுவது தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை வைத்துக்கொண்டு ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை குறித்து பேசி தற்போது அவர்கள் வீரர்களாக முயற்சிப்பதாகவும், ஆனால் அவர்களால் எந்த பயனும் இல்லை என கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்மன்பிலவின் அறிக்கை

இந்த நிலையில், சமீபத்தில் ரணில் விக்ரமசிங்கவின் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை என கூறி உதய கம்மன்பிலவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, உதய கம்மன்பிலவிற்கு ஜனாதிபதி அநுர உட்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, குறித்த விடயம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version