Home இலங்கை அரசியல் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லை! ஜோசப் ஸ்டாலின்

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லை! ஜோசப் ஸ்டாலின்

0

நாட்டில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான யோசனைகள் தொடர்பாக பிரதமர் கேட்டறிந்து கொண்டார்.

எனினும், அதற்கான பதிலை அவர் வழங்கியிருக்கவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் வருடத்துக்கான வரவு – செலவுத்திட்டத்தில் இது தொடர்பான தீர்வுகளை பிரதமர் முன்வைக்கவுள்ளதாக” அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

இதேவேளை, 2025 ஆம் ஆண்டு சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசியல் தலையீடுகள் காரணமாக கடந்தகாலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version