Home சினிமா 2021ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

2021ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

0

2021ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம் வாங்க.

மாஸ்டர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த இப்படம் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்தது. கொரோகா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போன நிலையிலும், மாபெரும் வெற்றியை சொந்தமாக்கியது மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  

சிறந்த நடிகர்கள் 2024: நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தவர்களின் பட்டியல்

கர்ணன்

தனுஷ் – இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான கர்ணன் மக்களால் கொண்டாடப்பட்டு வெற்றியடைந்தது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தில் ரஜீஷா விஜயன், லால், நட்டி நட்ராஜ், லட்சுமி ப்ரியா ஆகியோர் நடித்திருந்தனர்.

மாநாடு

நடிகர் சிம்புவின் மாஸ் கம்பேக் திரைப்படமாக அமைந்தது மாநாடு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக மிரட்டியிருந்தார். மேலும் எஸ்.ஏ. சந்திரசேகர், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வினோதய சித்தம்

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்தாலும் மக்களின் மனதை கவர்ந்து மாபெரும் வெற்றிப்படமாக மாறியது வினோதய சித்தம். சமுத்திரக்கனி இயக்கி நடித்திருந்த இப்படத்தில் தம்பி ராமையா முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருந்தார். தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் பீம்

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தை TJ ஞானவேல் இயக்க சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் மணிகண்டன், லிஜோமல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மனதை தோட்ட இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

லிப்ட்

கவின் – அமிர்தா அய்யர் நடிப்பில் உருவான லிப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்தது. ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களை கவர்ந்தது. வழக்கமான ஹாரர் திரைப்படம் போல் இல்லாமல் வித்தியாசமான திரைக்கதையில் உருவானது தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம் ஆகும்.  

NO COMMENTS

Exit mobile version