Home முக்கியச் செய்திகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட 83 சீனப் பிரஜைகள்

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட 83 சீனப் பிரஜைகள்

0

நாட்டில் தங்கியிருந்தபோது கணினி குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீனப் பிரஜைகள் இந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று (20) அதிகாலை விசேட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானத்தில் அவர்கள் நாடுகடத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நாட்டின் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட இந்த சீனப் பிரஜைகள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர்களை நாடுகடத்தும் முடிவின் அடிப்படையில் வெலிசரவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக

குறித்த சீனப் பிரஜைகள் 05 பேருந்துகளில் ஏற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையான பாதுகாப்பின் கீழ் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.

சீனப் பிரஜைகள் குழுவுடன் இந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் 85 பேரும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் 172 பேரும் இந்த விமானத்தில் பயணித்ததாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version